இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

0
246
#image_title

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

1)தலைவலி

துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும்.

2)செரிமானக் கோளாறு

ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும்.

3)பேதி

நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக கட்டுப்படும்.

4)பித்தம்

மருதாணி இலையை அரைத்து கை,கால்களில் பூசி வந்தால் பித்தம் குணமாகும்.

5)தேமல்

சிறிது பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை விரைவில் மறையும்.

6)மூலம்

ஒரு கிளாஸ் மோரில் சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து பருகி வந்தால் மூலம் குணமாகும்.

7)இருமல்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் முழுமையாக குணமாகும்.

8)வயிறு வலி

வெந்தயத்தை வறுத்து நீரில் காய்ச்சி குடித்து வந்தால் வயிறு வலி முழுமையாக குணமாகும்.

9)குடல் புண்

மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் குடல் புண் முழுமையாக குணமாகும்.

10)விக்கல்

பெரு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் முழுமையாக குணமாகும்.

Previous articleநெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
Next articleதலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!!