இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

0
99
#image_title

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

உடலில் வடு, கரும்புள்ளிகள், கொப்பளங்கள் இல்லாமல் இருக்க பலரும் விரும்புகின்றனர். இதற்காக கெமிக்கல் க்ரீம், பவுடரை மேனிக்கு உபயோகிக்கின்றனர். இதனால் இளம் வயதில் தோல் சுருக்கம், வறட்சி ஏற்பட்டு முதுமை தோற்றத்தை தந்து விடுகிறது.

இதை சரி செய்ய ஆரஞ்சு பழம் சிறந்த தீர்வாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு பழம்(மீடியம் சைஸ்) – 2
2)எண்ணெய் – 2 தேக்கரண்டி
3)கடுகு – 1/2 தேக்கரண்டி
4)சீரகம் – 1/4 தேக்கரண்டி
5)மிளகாய் பொடி – கரத்திற்கேற்ப
6)இஞ்சி – ஒரு துண்டு
7)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

இரண்டு ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி அதனுள் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு பழத்தை நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி ஊற்றவும்.

அவை சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடவும். அதன் பின்னர் தோல் நீக்கி நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டை சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள ஆரஞ்சு துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து கரத்திற்கேற்ப மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடங்களுக்கு வதக்கிய ஆரஞ்சை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

இந்த ஆரஞ்சு பழ சட்னி சமோசா, பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்றவைக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் தோலில் உள்ள கரும்புள்ளிகள், கொப்பளங்கள் மறைந்து மேனி அதிக பொலிவாக மாறும்.