5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க!

0
113
#image_title

5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க!

சுவாச உறுப்பான நுரையீரலில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து தள்ள சுக்குடன் சில பொருட்கள் சேர்த்து கசாயம் செய்து குடிங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)மிளகு
3)பட்டை
4)மல்லி விதை

செய்முறை:-

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து 3 மிளகு, ஒரு துண்டு பட்டை மற்றும் 1/2 தேக்கரண்டி மல்லி விதையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் இடித்த சுக்கு, மிளகு, பட்டை, மல்லியை போட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நாசி, நுரையீரலில் தேங்கி கிடந்த பல நாள் சளி சில நிமிடங்களில் கரைந்து மலம் வழியாக வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)வெற்றிலை
3)துளசி
4)தேன்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு துண்டு சுக்கு அல்லது ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி சேர்க்கவும். அதன் பின்னர் ஒரு வெற்றிலை, 15 துளசி இலை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்டும் வரை சில நிமிடங்களுக்கு காய்ச்சவும். பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் நுரையீரல் சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.