இதை பாலில் கலந்து குடித்தால் எலும்பு.. இரும்பு வலிமையை பெறும்!

0
213
#image_title

இதை பாலில் கலந்து குடித்தால் எலும்பு.. இரும்பு வலிமையை பெறும்!

உடலில் எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உணவுப் பொருட்களில் இந்த கால்சியம் சாது கிடைப்பதில்லை. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு வலி, வீக்கம் எளிதில் ஏற்பட்டு விடுகிறது.

உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க பாலில் சத்து பொடி சேர்த்து குடிங்க.

தேவையான பொருட்கள்….

1)கம்பு
2)பச்சை பயறு
3)கேழ்வரகு
4)கருப்பு உளுந்து
5)பால்
6)பனங்கற்கண்டு

ஒரு பாத்திரத்தில் 1 கப் கம்பு, 1 கப் பச்சைப்பயறு, 1 கப் கேழ்வரகு சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் வரை ஊற விடவும்.

பிறகு தண்ணீரை வடிகட்டி விடவும். இந்த பொருட்களை முளைக்கட்ட வேண்டும். அதற்கு முதலில் சுத்தமான ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஊறவைத்த கம்பு,பச்சைப்பயறு, கேழ்வரகு சேர்த்து மூட்டை கட்டி முளைக்கட்டவும். ஒரு நாள் விட்டால் பயிர் மூளைக்கட்டி விடும்.

பிறகு இதை ஒரு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் 1 கப் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும். இந்த பாலில் தயாரித்து வைத்துள்ள பொடி 1 ஸ்பூன் போட்டு காய்ச்சி ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கவும்.