இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்!
சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை மருந்து மாத்திரை இன்றி கரைத்து வெளியேற்ற உதவும் இயற்கை வைத்தியம்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை
2)தூதுவளை
3)கருந்துளசி
4)மிளகு
5)சுக்கு
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி, 1/4 கைப்படி அளவு தூதுவளை மற்றும் 5 வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் உலர்ந்த இலைகளை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அதனை தொடர்ந்து 20 மிளகை அதில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வெற்றிலை, தூதுவளை, கருந்துளசி பொடியில் சுக்கு, மிளகு பொடியை போட்டு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்கு கொதிக்க விட்டு குடித்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.