ஒரு பல் பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் வாழ்நாளில் மருத்துவ செலவு ஏற்படாது!

Photo of author

By Divya

ஒரு பல் பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் வாழ்நாளில் மருத்துவ செலவு ஏற்படாது!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வைரஸ், பாக்டீரியா, தொற்று கிருமிகள் அனைத்தும் எளிதில் நுழைந்து விடும். இவ்வாறு ஏற்படும் பொழுது நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்க கீழே தரப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)தேன்

செய்முறை:-

பொதுவாக பூண்டு நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. இதை சுட்டு சாப்பிட்டால் அதில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

ஐந்து பல் பூண்டை தோல் நீக்கி வைக்கவும். பிறகு ஒரு கம்பியில் பூண்டு பற்களை சொருகவும்.

அடுத்து அடுப்பு பற்ற வைத்து பூண்டு பற்களை நெருப்பில் காட்டி சுட்டுக் கொள்ளவும். பூண்டு பற்கள் கருகிடமால் பார்த்துக் கொள்ளவும்.

பிறகு நெருப்பில் சுட்ட பூண்டு பற்களை ஆறவிட்டு ஒரு உரலில் போட்டு இடிக்கவும். இந்த ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். செரிமானக் கோளாறு நீங்கும். வாயுத் தொல்லைக்கு நிரந்தர தீர்வாக இவை இருக்கும்.