இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

Photo of author

By Divya

இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

மோசமான வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த நோய் உண்டாகிறது. இந்த நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உண்ணும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால் மன அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

எனவே மாத்திரைகளுக்கு பதில் சில வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

*நாவல் விதை

*தண்ணீர்

செய்முறை…

முதலில் 1 கப் அளவு நாவல் விதையை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் நாவல் விதை பொடி 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பாகற்காய்

*எலுமிச்சை சாறு

*தண்ணீர்

செய்முறை…

முதலில் ஒரு பாகற்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.