வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்!

Photo of author

By Divya

வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)முருங்கை பூ
3)துளசி
4)கருஞ்சீரகம்

செய்முறை:-

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கை பூ மற்றும் துளசி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை நிழலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அரைத்த துளசி, முருங்கை பூ பொடி மற்றும் வெந்தயம், கருஞ்சீரகப் பொடியை ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.

தண்ணீர் 1/2 டம்ளர் அளவு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.