உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா… அப்போ சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க…
ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வைத்தியத்தை செய்து பாருங்கள்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது என்பது சாதாரணமாக ஆகி விட்டது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை.உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது, டயட் முறை மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற.பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கின்றது. இந்த பதிவில் மிகவும் எளிமையான முறையில் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* சீரகம்
* பட்டை
செய்யும் முறை…
முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு பட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் 150 மிலி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே அப்படியே மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். ஒருநாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்.
மறுநாள் காலையில் இதை பார்க்கும் பொழுது சீரகத்தின் சத்துக்கள் அனைத்தும் இந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். இதை வேறு ஒரு டம்ளரில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சீரகத் தண்ணீரை மூன்று விதத்தில் குடிக்கலாம்.
இந்த சீரகத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிடலாம். அல்லது இந்த சீரகத் தண்ணீருடன் சிறிதளவு சுடு தண்ணீரும் சிறிதளவு தேனும் கலந்து சாப்பிடலாம். அல்சர் பிரச்சனை இல்லாதவர்கள் இந்த சீரகத் தண்ணீருடன் சேர்த்து எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் தேன் சிறிதளவு கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதால் உடல் எடையானது கணிசமான அளவில் குறையத் தொடங்கும்.
மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஊரவைக்க வேண்டும். சீரகம் தண்ணீரில் ஊறிய பின்னர் இதை காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகளில் குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை தூண்டிவிடுகின்றது. மேலும் வாயுப் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு கெட்டக் கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இதனால் தொப்பை மிக வேகமாக குறையத் தொடங்குகின்றது.
சீரகத்தின் பயன்கள்
* சீரகம் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி விடுகின்றது.
*சீரகத்தில் நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகளவு உள்ளது.
*சீரகத்தை நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் பொழுது மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
*நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்கு வலிமைபடுத்துகின்றது.
* நியாபக சக்தியை அதிகரித்துக் கொடுக்கவும் சீரகம் உதவுகின்றது.
*இரத்த சோகை நோயை குணப்படுத்தவும் சீரகம் உதவி செய்கின்றது.
* தினசரி சீரகத்தை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது செரிமானத்தை எளிமையாக்குகின்றது.
* வாயுத் தொல்லை இருந்தால் அதையும் சீரகம் சரி செய்கின்றது.