அழகிற்கு தலையில் வைக்கப்படும் ரோஜா பூ… இதன் இதழ்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

0
35

 

அழகிற்கு தலையில் வைக்கப்படும் ரோஜா பூ… இதன் இதழ்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…

 

தலையில் அழகிற்காக வைக்கப்படும் ரோஜா பூவின் இதழ்களில் பல நன்மைகள் உள்ளது. அந்த நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

பூ என்று நினைத்தால் நம் நினைவிற்கு முதலில் வருவது ரோஜா பூ தான். பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் ரோஜா பூவை விரும்புகிறார்கள்.

 

எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது ரோஜா பூ தான். இந்த ரோஜா பூக்களை அழகுக்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தலாம். இந்த ரோஜா பூவின் இதழ்களில் என்ன நன்மைகள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 

ரோஜா பூவின் நன்மைகள்…

 

* ரோஜா பூவில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை உள்ளது. இதனால் நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருகின்றது.

 

* ரோஜாப் பூவின் இதழ்கள் நமக்கு ஏற்படும் சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.

 

* மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் மூலநோய் குணமாகும்.

 

* கடுமையான வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து நன்றாக கழுவி அதை மென்று சாப்பிட்டாத் வயிற்று போக்கு குணமாகும்.

 

* பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை தொடர்பான நோய்களை இந்த ரோஜா இதழ்கள் சரி செய்கின்றது.

 

* பெண்கள் இந்த ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை வலுப் பெறும். கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

* என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வரலாம்.

 

* கெட்டியான தயிரில் ரோஜா இதழ்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அதை தயிருடன் கலந்து காலை வேலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும்.

 

* செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் செரிமான அமைப்பு மேம்படும். செரிமான பிரச்சனை குணமாகும்.

 

* ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். பின்னர் அதை காலையில் அரை டம்ளர் மற்றும் இரவு அரை டம்ளர் என்று குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

* உடல் எடையை குறைப்பதில் ரோஜா இதழ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.