இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

0
76
#image_title

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய் – 1 கப்
2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
3)காய்ந்த மிளகாய் – 3
4)எண்ணெய் – சிறிதளவு
5)உளுந்து பருப்பு – 2 தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
7)பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு உளுந்து பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கி ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கிய சுண்டைக்காயில் தேங்காய் துருவலை போட்டு கிளறவும்.

முதலில் வறுத்த வரமிளகாய் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து வதக்கிய சுண்டைக்காய் கலவையை போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் வயிறு உப்பசம், வயிறு கோளாறு, வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு நீங்கும்.