வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

0
138
#image_title

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் பொடி, கொய்யா இலை பொடி சேர்த்து சாப்பிட வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

1)வெற்றிலை
2)வெந்தயம்
3)சோம்பு
4)நாவல் விதை பொடி
5)கொய்யா இலை பொடி

செய்முறை…

நாவல் விதை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்… இல்லையென்றால் நாவல் விதையை உலர்த்தி காயவைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம்.

அதேபோல் கொய்யா இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம்.

இரண்டு முழு வெற்றிலை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி சோம்பு, 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.

பிறகு அதில் 1 தேக்கரண்டி நாவல் விதை பொடி மற்றும் 1 தேக்கரண்டி கொய்யா இலை பொடி சேர்த்து வெற்றிலையை மடக்கி வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும்.