வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

Photo of author

By Divya

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

Divya

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேசன் கடைகள் மூலம் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தரப்பில் பொருட்களாகவோ, பணமாகவோ மக்கள் பயன்பெறும் வகையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புடன், கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்டவைகள் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொருட்களுக்கு பதிலாக மக்களுக்கு ரூ.1000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.