நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

0
69
#image_title

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு சென்றது. தொடர் கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ள நீர் வடிய தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.

இந்நிலையில் மழை வெள்ள நிவாரண நிதியாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் வெள்ள நிவாரண நிதியான ரூ.6000 அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. நிவாரணத் தொகையை ரூ.12000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருபதாவது, திமுக அரசு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிபந்தனை இன்றி நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசால் இன்று பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கின்றனர். மழை வெள்ளாதல் மக்கள் தங்களது வாழ்வாதாரம், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்க இருக்கும் மழை நிவாரண நிதியை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று திமுக அரசை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.