மீண்டும் சொதப்பிய ஹர்டிக் பாண்டியா!

0
71

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அவுட் ஆகி வெளியேறினார். இது அவருடைய முதல் சர்வதேச டி20 போட்டி என்று சொல்லப்படுகிறது இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த தவான் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி மிக நிதானமாக ஆடியது. அதோடு அணியின் ஸ்கோர் உயர்ந்தது இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 57 ரன்களை சேர்த்தது 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் எல்பிடபிள்யூ ஆனார்.

மிகவும் குறைவான ரன்களுடன் திணறி வந்த இந்திய அணியை ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மீட்டனர் .அதிரடியாக விளையாடிய தவான் 36 பந்துகளில் 46 ரன்களை எடுத்து வெளியேறினார். இன்னொரு முனையில் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரை சதம் விளாசினார் .இதன்காரணமாக 15.2 ஓவர்களில் இந்திய அணி 127 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

இதில் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி ரன்னை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற சூழலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் தந்தார் 12 பந்துகளை சந்தித்த பாண்டியா 10 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக கடைசி ஓவர்களில் நிசான் கிசான் மற்றும் 20 ரன்கள் எடுத்தார் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

சமீபத்திய தொடர்களில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மிகப்பெரிய அளவில் சொதப்பி வருகின்றது என்று சொல்லப்படுகிறது. இந்திய அணி நிர்ணயித்த 165 என்ற இலக்கை இலங்கை பேட்ஸ்மேன்கள் எட்டிப்பிடிக்க முடியவில்லை இது இலங்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.