பிரதமரை அடுத்து முக்கிய நபரை சந்திக்க இருக்கும் இபிஎஸ்!

0
85

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்றைய தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற இருப்பதாகவும் , தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், தெரிவித்து வருவது தொடர்பாகவும், ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்காக நன்றி தெரிவித்ததுடன் மேகதாது அணைக்கட்டக்கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், மத்திய இணையமைச்சர் முருகனை எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சந்தித்து பேசயிருக்கிறார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.