வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!!
மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.மலச்சிக்கலால் உடல் இயக்கமே மாறிவிடும்.
உடலில் பல வித பாதிப்புகள் ஏற்பட்டு உடல் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே மலக் குடலில் தேங்கி உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வெள்ளரி ஜூஸ் செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளரிக்காய்
2)தண்ணீர்
3)எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு வெள்ளரிக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த வெள்ளரி துண்டுகளை போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கிளாஸ் எடுத்து அதில் இந்த வெள்ளரி ஜூஸை ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து கொள்ளவும்.
இந்த வெள்ளரி ஜூஸை கலக்கி காலை நேரத்தில் குடித்து வந்தால் மலக் குடலில் இறுகி போன மலம் இளகி வெளியில் வந்து விடும்.