தீராத மலச்சிக்கல் பாதிப்பு 5 நிமிடத்தில் நீங்க விளக்கெண்ணெயில் நான்கு மிளகு சேர்த்து இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

0
60
#image_title

தீராத மலச்சிக்கல் பாதிப்பு 5 நிமிடத்தில் நீங்க விளக்கெண்ணெயில் நான்கு மிளகு சேர்த்து இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

மலசிக்கல் அறிகுறி:-

பசியின்மை, குமட்டல் உணர்வு, வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு உள்ளிட்டவைகள் மலசிக்கலுக்கான அறிகுறிகள் ஆகும்.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது, உடலுக்கு தேவையான நீரை பருகாதது, அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, மலத்தை கழிக்காமல் அடக்கி வைத்தல், உணவில் நார்ச்சத்து குறைவாக இருத்தல், வயது முதிர்வு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவைகள் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படக் காரணங்களாக சொல்லப்படுகிறது.

மலத்தை வெளியேற்றுவதற்காக நாம் செய்யும் தவறு:-

சூடான காபி, தேநீர் பருகுதல், சிகரெட் புகைத்தல், அதிகளவு தண்ணீர் குடித்தல். இதுபோன்ற செயல்கள் மூலம் மலத்தை வெளியேற்றுவது தவறான செயல் ஆகும்.

மலக் கழிவுகளை வெளியேற்ற உதவும் பானம்…

தேவையான பொருட்கள்:-

*மிளகு

*விளக்கெண்ணெய்

*எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 4 மிளகு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றில் அடைபட்டு கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.