இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

0
280
#image_title

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச்22) முதல் ஆரம்பம் ஆகின்றது. முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது.

2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்புடன் நடைபெற்று வருகின்றது. இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ஒரே அணியில் இணைந்து இந்த தொடரின் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதையடுத்து 17வது ஐபிஎல் தொடர் இன்று(மார்ச்22) தொடங்கி மே மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐபிஎல் பெட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் உள்பட பத்து அணிகள் பங்கேற்கின்றது. இதையடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(மார்ச்22) மாலை 6.30 மணிக்கு தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்குகின்றது.

தொடக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. கடைசி நேரத்தில் திடீரென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பதவியை எம்.எஸ் தோனி அவர்கள் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தங்களுடைய அணியின் பெயரை மாற்றியுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கிளென் மேக்ஸ்வெல், விராட் கோஹ்லி, கேப்டன் பாப் டூப்பிளிசிஸ், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் ஆகியோர் பலமாக இருக்கின்றனர். அதே போல பந்துவீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், விஜய்க்குமார் வைஷாக், ரீஸ் டாப்லே, லோக்கி பெர்குசன் ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, டேரி மிட்செல், கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, மொயின் அலி, எம்.எஸ் தோனி ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருக்கின்றனர். அதே போல பந்துவீச்சில் ரவீந்திய ஜடேஜா, முகேஷ் சவுத்ரி, மிட்செல் சேன்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீசா பதிரானா ஆகியோர் பலமாக இருக்கின்றனர்.

6வது முறையாக கோப்பையை வென்றுவிட வேண்டும் நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. அதே போல ஒரு முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024 தொடரில் களமிறங்குகின்றது.

இந்த போட்டி இன்று(மார்ச்22) இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகின்றது. முன்னதாக 6.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்சய் குமார், டைகர் ஷெராப் ஆகியோர் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

Previous articleநாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!
Next articleகுடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!