நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

0
205
#image_title

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் என அடுத்தக்கடடதை நோக்கி சென்று கெண்டுள்ளது, தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது எனலாம்.

அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 19 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நேரடியாக தேர்தலில் போட்டியிடவுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள், பாமக கட்சி 10, த. மா. க கட்சி 3, சின்னம் உறுதி செய்யப்படாத ஓ. பி. எஸ். அணிக்கு1, புதிய நீதிக் கட்சி, தமமுக, இ.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பாஜக போட்டியிடும் 19தொகுதிகள் எவை எவை என்பதை காண்போம், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பத்தொன்பது தொகுதிகளில் பாஜக கட்சி போட்டியிடுகிறது.

சமீபத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வரும் பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என அரசியல் வட்டங்கள் பொதுமக்கள் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.

author avatar
Savitha