ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்!
தமிழ்நாட்டில் , கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த அண்ணாமலை ஒரு பொறியியல் பட்டதாரி மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கர்நாடக காவல் அதிகாரியாக சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார்.
கர்நாடக காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்ததை தொடர்ந்து அவரை கர்நாடக சிங்கம் என்று அழைத்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்து சொந்த மாநிலமான தமிழ்நாடு வந்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேசிய பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், பின்னர் 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக கட்சியின் துணை தலைவராக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.
தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது , ஆளுங்கட்சி ஊழல்களையும், கொள்ளைகளையும் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
சிறந்த செயல்களை பாராட்டுவது, தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து மற்றும் ‘எம் மண் எம் மக்கள் ‘என்ற தமிழக பாதை யாத்திரையை மேற்கொண்டார், இந்த பாதை யாத்திரை மக்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் கள்ளத்திலும் பேசு பொருளாக இருந்தது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார், இதன் மூலம் அண்ணாமலை சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவரது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.