இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மாலை தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 328 ரன்கள் குவித்தது. 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி அதே 49.5 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஏற்கனவே இங்கிலாந்து அணி 2 – 0 என்ற கணிக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் அயர்லாந்து அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.