பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

0
68

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். மக்கள் பண தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பள்ளிகளில் முழுமையான கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது.கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழக உயர் நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.ஆனால் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறியும் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

இது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் பெற்றோரை கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவரும் பொது முடக்கத்தில் அவதிக்குள்ளாகி இருப்பதனால் இது போன்ற கட்டணங்கள் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
Kowsalya