முறையற்ற மாதவிடாய்? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! ஒரு மணி நேரத்தில் பலனைப் பெறுங்கள்!!

0
27
#image_title

முறையற்ற மாதவிடாய்? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! ஒரு மணி நேரத்தில் பலனைப் பெறுங்கள்!!

பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். இந்த பிரச்சனையால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதிலேயே சந்திப்பதினால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிவிடுகிறது. இதனை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு உரலில் 1 தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

பின்னர் இடித்து வைத்துள்ள கருஞ்சீரக பவுடர் 1 தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். 1 1/2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அதில் தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கி பருகவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் முறையற்ற மாதவிடாய் பாதிப்பு விரைவில் சரியாகி இந்த பாதிப்பிற்கு குட் பாய் சொல்லிவிடலாம்.