பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!
கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் போனது. மேலும் மகனின் படிப்புக்காக பள்ளிக்கு 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்நிலையில் மகனின் 12 ஆம் வகுப்பு சான்றிதழை கேட்ட பொழுது பள்ளிக்கு கட்டவேண்டிய பணத்தை கட்டினால் தனது மகனின் சான்றிதழை பள்ளி நிர்வாகம் தருவதாக தெரிவித்தனர்.
மேலும் சிங்காரவேலன் என்னிடம் தற்போது 25 ஆயிரம் மட்டுமே உள்ளது அதனை நான் செலுத்துகிறேன் மீதி தொகையை வரும் காலங்களில் செலுத்தி விடுகிறேன் என்று கூறினார் மேலும் தனது இளைய மகன் தற்போது உங்கள் பள்ளியில் தான் படித்து வருகிறான் என தயவு செய்து மூத்த மகனின் சான்றிதழ்களை தருமாறு பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் பள்ளி நிர்வாகமானது இரண்டாம் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் முழு தொகையையும் செலுத்த வேண்டும் என கூறி சிங்காரவேலன் என்பவரை அனுப்பி வைத்தது.
மேலும் அவரது மகன் உயர்கல்வியில் சேர விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதற்கு 12 ஆம் வகுப்பு சான்றிதழ் மிக அவசியமானது எனவே அதனை பள்ளி நிர்வாகத்திடம்மிருந்து பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க வந்திருப்பதாக செய்தியாளரிடம் சிங்காரவேலன் கூறினார்.