மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

0
148
#image_title

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

*திப்பிலி
*மிளகு
*அதிமதுரம்
*பூண்டு
*துளசி பொடி

ஒரு கைப்பிடி அளவு துளசியை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் திப்பிலி மற்றும் அதிமதுரத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

8 பல் பூண்டை தோல் நீக்கி ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும். அதேபோல் மிளகு 1/4 தேக்கரண்டி அளவு போட்டு வறுக்கவும்.

இந்த பூண்டு மற்றும் மிளகை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்த துளசி பொடி, திப்பிலி மற்றும் அதிமதுரப் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அதன் பின்னர் வறுத்து அரைத்த பூண்டு மற்றும் மிளகு பொடியை அதில் சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.

காலை மற்றும் மாலை என இருவேளை இந்த பொடியை வாயில் போட்டு சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த பொடியை சேர்த்து கலக்கி குடிக்கவும். இவ்வாறு செய்வதினால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதுமாக கரைந்து மலம் வழியாக வெளியேறும்.