உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு, தற்பொழுது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தகுதி இருந்தும் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இந்த உரிமை தொகையானது கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மீண்டும் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்தது.
இந்த கால அவகாசம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக கூறுகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே போராட்டம் எழுந்துள்ள்ளது. அந்த வகையில் முள்ளி கொளத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் அரசின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அரசின் அனைத்து விதிமுறைகளின் கீழ் வந்தும் ஏன் எங்களை நிராகரித்தனர் என கூறி போராட்டத்தை நடத்தினர்.
இவர்களின் போராட்டத்தை அறிந்த திருக்கழுகுன்றம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் நாங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கான உரிமை தொகை கிடைக்கவில்லை இது குறித்து உரிய அதிகாரியிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களை மதித்து பதில் கூட சொல்வதில்லை என அடுத்தடுத்து குற்றசாட்டை அப்பெண்கள் சுமத்தினர். மேற்கொண்டு எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என காவல் அதிகாரியிடம் தெரிவித்து சென்றுள்ளனர். செயலாக்கத்துறை அமைச்சரான உதயநிதி தகுதியுள்ள ஒருவரை கூட விடாமல் அனைவருக்கும் ஆயிரம் உரிமை தொகை கிடைக்க வழி செய்வோம் என கூறி வருகிறார்.
ஆனால் மறுபக்கமும் அதன் கீழ் செயல்படும் ஊழியர்கள் இவ்வாறான புகார்களை கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்வது அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது. தகுதி இருந்தும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை கிடைக்காமல் இருப்பது குறித்து திமுகவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.