புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

0
33
#image_title

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் வைத்தியநாதன் அவர்களின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.

அந்த அமைப்பில் பேசிய மர்ம நபர் வங்கி மேலாளர் போல வைத்தியநாதன் அவர்களிடம் பேசியுள்ளார். அதாவது அந்த அழைப்பில் வைத்தியநாதன் அவர்களிடம் அந்த மர்மநபர் “நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர் பேசுகின்றேன். உங்களுடைய வங்கிக் கணக்கு இன்றுடன் முடிகின்றது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதை சொல்ல வேண்டும். அதை சொன்னால் நீங்கள் வங்கிக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம். அதற்கு நான் உதவி செய்கிறேன்” என்று நம்பிக்கையாக பேசினார்.

இதையடுத்து அந்த மர்ம நபர் கூறியது உண்மை என்று நினைத்து வைத்தியநாதன். அவர்கள் ஓடிபி எண்ணையும், வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை கூறினார். பின்னர் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சில நிமிடங்கள் கழிந்து வைத்தியநாதன். அவர்களின் செல்போனுக்கு வங்கியில் இருந்து 4 லட்சத்து 10000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த வைத்தியநாதன் வங்கி மேலாளர் போல பேசிய அந்த நபருக்கு அவர்கள் அழைப்பு விடுத்த பொழுது அந்த மர்மநபரின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து வைத்தியநாதன் அவர்கள் தான் ஏமாற்றப்பட்டதை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வைத்தியநாதன் அவர்கள் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல் துறை சூப்பிரண்டு பாஸ்கரன் அவர்கள் “இது போன்ற வரும் அழைப்புகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம். யாரிடமும் தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம். வங்கியில் இருந்து மேலாளர் ஒருபோதும் உங்களிடம் ரகசிய எண்(ஓடிபி) கேட்கமாட்டார்கள். யாரேனும் ஓடிபி எண் கேட்டால் மக்கள் யாரும் ஓடிபி எண்களை தெரிவிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற ஆன்லைன் கிரைம் சம்பவங்கள் விதவிதமான வகையில் நடைபெற்று வருகின்றது. எனவே மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளிநாட்டு அழைப்புகள் வந்தாலோ அல்லது இது போன்ற அழைப்புகள் வந்தாலோ யாரும் பதில் அளிக்க வேண்டாம். எனவே அனைவரும் கவனமாக இருங்கள்.