இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Photo of author

By Divya

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

தை மாதம் தொடங்கிவிட்டது… இனி 2 மாதங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும்… அதன் விலையும் அதிகரிக்கும்.

கடந்த சில தினங்களாக 1 கிராம் தங்கத்தின் விலை 5,850க்குள் விற்று வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 5,900த்தை நெருங்கும் என்று சொல்லப்படுகிறது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்வதற்குள் அதை வாங்கி விட வேண்டும் என்று நம் மக்களும் முயன்று தான் வருகின்றனர். ஆனால் போகின்ற போக்கை பார்த்தால் தங்கம் வாங்குவது எட்டா கனியாகியவிடும் போல.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.5,810க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்கின்றது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.46,600க்கும், ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து, ரூ.5,825க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.50,840க்கும் விற்பனையாகின்றது.

இருந்த போதிலும் வெள்ளி விலை சற்று இறக்கம் கண்டு இருக்கின்றது. கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை குறைந்த போதிலும் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.