உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

Divya

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம்.

ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று செய்து வரவும்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள் மண் அகல் பெரியது ஒன்று,மண் அகல் சிறியது ஒன்று,பஞ்சு திரி,நெய்,கல் உப்பு மட்டுமே.

இந்த விளக்கை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வழிபட்டாலும் சரி உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி உரிய பலன் அவசியம் கிடைக்கும்.

அமாவாசை நாளில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறை அல்லது குலதெய்வ கோயிலுக்கு சென்று ஒரு பெரிய மண் அகல் விளக்கு வைத்துக் கொள்ளவும்.அதனுள் கல் உப்பு நிரப்பி விட்டு அதன் மேல் ஒரு சிறிய மண் அகல் வைக்கவும்.

பிறகு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரட்டை பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும்.பிறகு வாங்கிய கடன் அடைந்து போக வேண்டும்.கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வரக் கூடிய ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று செய்து வந்தால் மொத்த கடனும் அடைய வழி பிறக்கும்.