காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மூலமாக செய்த ஒரு வேலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஆணை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் சந்திப்பதற்காக கிராமத்திற்கு வரும் மின்விநியோகத்தை தடை செய்து மின்மாற்றி அருகே பேசி வந்துள்ளனர். அதாவது, கிராமத்திற்கு வரும் வெளிச்சத்தை இவர்கள் இருவரும் தடுத்து மின்மாற்றியை ஆப் செய்திருக்கின்றனர்.

இவ்வாறு தினமும் இந்த திருட்டு காதலர்கள் கிராமத்திற்கு இருளை கொடுத்து வந்திருக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே அந்த கிராமம் இருளாக காட்சியளித்துள்ளது.

தினமும் ஒரே நேரத்தில் இப்படி மின்விநியோகம் வராமல் இருப்பது குறித்து அந்த கிராம மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். அப்போது கிராம வாசிகள் அங்கு சென்று பார்க்கும் போது இந்த திருட்டு காதலர்கள் சிக்கி கொண்டார்கள்.

இந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் உள்ள பெத்தியா மாவட்டத்தில் அமைந்துள்ள நௌதன் காவல் நிலையத்தின் அருகே அரங்கேறி உள்ளது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, சிக்கிய அந்த காதலர்களின் நிலைமை தற்போது என்னவென்று தெரியவில்லை. இதன் பிறகு அந்த கிராமத்தில் மின்விநியோகம் எந்த பாதிப்பும் இல்லாமல் தற்போது சீராக இயங்கி வருகிறது. இதனால் மக்களும் நிம்மதியாக இருக்கின்றனர்.இந்த சம்பவம் தற்போது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.