தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

0
133
#image_title

தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

தமிழ் திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் மோகன் ராஜா.நடிகர் ஜெயம் ரவி அவர்களின் அண்ணனா இவர் தமிழில் ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி,உனக்கும் எனக்கும்,தனி ஒருவன்,வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் தன் சகோதரர் ஜெயம் ரவி அவர்களை வைத்து பெரும்பாலான படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.இப்படத்தில் நயன்தாரா,அரவிந்த் சாமி,தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இதுவரை நமக்கு திரையில் ஹீரோவாக காட்சி தந்த அரவிந்த் சாமி இப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக தோன்றி நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு தனி ஒருவன் படத்தின் 2 பாகம் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி,நயன்தாரா தற்பொழுது 2 பாகத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது.படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு விக்ரம்,பகத் பாசில் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் அவர்கள் அந்த ரோலில் நடிக்க விரும்பாத காரணத்தினால் தற்பொழுது பிரபல பாலிவுட் ஸ்டாராக கொண்டாடப்படும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleகாப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!
Next articleஉயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!