ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு குழுவினர் மாவட்ட நிர்வாகம், கால்நடை துறையினரிடம் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்து.ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.மேலும் நேற்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டது.ஜல்லிக்கட்டு குழுவினர் அரசு கூறிய இருந்த கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த முன்னேற்பாடுகள் செய்து முடித்த நிலையில் அதனை சரி பார்த்து வருகின்றனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமு,போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட கால்நடை துறை அலுவலர்,வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை சரிவர செய்து முடிக்காத நிலையில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க முடியாது என்று மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார்.இந்த ஜல்லிக்கட்டு வேறு ஒரு தேதியில் நடத்தி கொள்ளுங்கள் என உத்தரவிட்டுள்ளனர்.