இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

0
140
Public Examination Fees to be paid from today! Important information for schools!
Public Examination Fees to be paid from today! Important information for schools!

இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டது.ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பிளஸ் டூ பொது தேர்வு வரும் மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.மேலும் அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடமிருந்து தேர்வுக் கட்டணத்தைப் பெற்று அந்த தொகையை நேற்று முதல் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு இனையவழியில் செலுத்து வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கில இந்தியப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் தேர்வுக் கட்டண விளக்கு பெறத் தகுதியுடையவர்கள் இல்லை.இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

பிளஸ் டூ பொதுத்தேர்வுக் கட்டணம்,அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் என அனைத்திற்கும் செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K