ஒரே நாளில் மொத்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவும் “கீழா நெல்லி” – எப்படி பயன்படுத்துவது?
எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் வளரும் மூலிகை தாவரம் கீழா நெல்லி. இதன் இலைகளுக்கு கீழ் சிறு சிறு நெல்லி இருக்கும். இவை கசப்பு தன்மை கொண்ட மூலிகை ஆகும்.
கீழா நெல்லியில் உள்ள சத்துக்கள்:-
*பொட்டாசியம்
*வைட்டமின் சி
*இரும்புச்சத்து
*மினரல்ஸ்
*கார்போஹைட்ரேட்
கீழா நெல்லி குணப்படுத்த கூடிய நோய் வகைகள்:-
*மஞ்சள் காமாலை
*கிட்னி ஸ்டோன்
*உடல் சூடு
*பெண்களுக்கு வெள்ளைப்படுதல்
*எலும்பு சம்மந்தமான பாதிப்பு
*கல்லீரல் நச்சு
கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேற வீட்டு வைத்தியம்:-
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*கீழா நெல்லி – தேவையான அளவு
*தண்ணீர் – 2 கிளாஸ்
செய்முறை:-
அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு கீழா நெல்லி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஆறவைத்து வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
கீழா நெல்லி இலை – சிறிதளவு
செய்முறை:-
சிறிதளவு கீழா நெல்லி இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் இடித்து வைத்துள்ள கீழா நெல்லியின் சாற்றை பிழிந்து கொள்ளவும். பிறகு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பருகவும்.
இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்பட்டு சிறுநீரத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும்.
தீர்வு 3:
தேவையான பொருட்கள்:-
*கீழா நெல்லி
*மோர்
செய்முறை:-
கீழா நெல்லியை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு டம்ளரில் போட்டு தேவையான அளவு மோர் மற்றும் சிறிதளவு உப்பு கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு மட்டும் இன்றி வாய்ப்புண் வயிற்றுப்புண் உள்ளிட்டவைகள் சரியாகும்.