தலை முடி கருமை மற்றும் அடர்த்தியாக வளர இந்த எண்ணெயை தடவுங்கள் போதும்!!
பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது. இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.
தேவையான பொருட்கள்:-
*செம்பருத்தி பூக்கள் – 30
*ஆலிவ் எண்ணெய் – 1/4 லிட்டர்
*தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
*வெந்தயம் – 5 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1/4 லிட்டர் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
பின்னர் ஒரு 15 செம்பருத்தி பூக்களை எடுத்து அதன் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இந்த இதழ்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் 5 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் மீதமுள்ள செம்பருத்தி பூக்களை எடுத்து அந்த எண்ணெயில் போட்டுநன்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெயை நன்கு ஆறவைத்து பின்னர் ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தோம் என்றால் தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். இளநரை, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளும் முழுமையாக சரியாகி விடும்.
செம்பருத்தி எண்ணெயின் நன்மைகள்:-
செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
இந்த எண்ணெயை தலைக்கு தடவினால் உடல் சூடு குறையும்.
தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது.