கேஸ் அடுப்பில் படிந்துள்ள விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை இந்த 2 பொருட்கள் வைத்து 5 நிமிடங்களில் நீக்கி விடலாம்

0
33
How to Clean Oil Dust in Gas Stove in Tamil
How to Clean Oil Dust in Gas Stove in Tamil

கேஸ் அடுப்பில் படிந்துள்ள விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை இந்த 2 பொருட்கள் வைத்து 5 நிமிடங்களில் நீக்கி விடலாம்

நாம் அனைவரும் கேஸ் அடுப்பை பயன்படுத்தி பல வித உணவுகளை சமைத்து உண்டு வருகிறோம். இந்த கேஸ் அடுப்பை தொடர்ந்து உபயோகிப்பதால் அதில் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு படிந்து விடுகிறது. இதனால் அடுப்பு பார்க்க அசுத்தமாக காணப்படும். இதை எலுமிச்சை மற்றும் சமையல் சோடாவை பயன்படுத்தி சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம் – 1

*சமையல் சோடா – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

*காட்டன் துணி – 2

சுத்தம் செய்யும் முறை:-

கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய முதலில் 1 எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை இரண்டாக நறுக்கவும். அடுத்து சமையல் சோடா(பேக்கிங் சோடா) 2 தேக்கரண்டி எடுத்து நறுக்கி வைத்துள்ள எலுமிச்சம் பழத்தின் மேல் தூவிக் கொள்ளவும்.

இந்த எலுமிச்சம் பழத்தை அடுப்பில் வைத்து தேய்ப்பதற்கு முன் அடுப்பில் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். அடுத்து எலுமிச்சை + சோடாவை அடுப்பில் எண்ணெய் பிசுக்கு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும்.

இவ்வாறு 5 முதல் 7 நிமிடங்கள் வரை தேய்க்கவும். பின்னர் அதை 15 நிமிடம் ஊற விடவும். அடுத்து 15 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு காட்டன் துணி எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கேஸ் அடுப்பை நன்கு தேய்க்கவும்.

பின்னர் மீண்டும் ஒரு காட்டன் துணி எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அடுப்பை முழுவதும் சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் சில நிமிடத்தில் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்பட்ட அடுப்பை புதிது போன்று காட்சியளிக்கும்.