நம்மை படுத்தி எடுக்கும் “பல்லி” மற்றும் “கரப்பான் பூச்சி” தொல்லை அடியோடு ஒழிய இதை மட்டும் செய்தால் போதும்!!

0
99
#image_title

நம்மை படுத்தி எடுக்கும் “பல்லி” மற்றும் “கரப்பான் பூச்சி” தொல்லை அடியோடு ஒழிய இதை மட்டும் செய்தால் போதும்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கரப்பான் பூச்சி, பல்லி உள்ளிட்டவைகள் நுழைந்து நம்மை படுத்தி எடுத்து வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. ஜன்னல், கதவு, சமையலறை என்று அனைத்து இடங்களிலும் சுவற்றில் ஒட்டிக் கொண்டு நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பல்லி மற்றும் கரப்பான் பூச்சி விஷத் தன்மை கொண்ட உயிரினம் ஆகும்.
சமையலறையில் பல்லி, கரப்பான் பூச்சி மட்டுமல்ல வேற எந்த பூச்சுகளின் நடமாட்டமும் இல்லமால் பார்த்துக் கொள்வது நல்லது.

இந்த பல்லியின் சிறுநீர் மற்றும் எச்சம் மனிதர்களுக்கு பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவிடும் ஆபத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் கரப்பான் பூச்சியில் அதிக கெட்ட பாக்டீரியாவை கொண்டிருக்கிறது. இந்த பல்லி மற்றும் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும். இல்லை என்றால் நம் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

நம் வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்கள்:-

பொதுவாக கதவு மற்றும் ஜன்னல்களில் தான் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும். எனவே கதவு மற்றும் ஜன்னலை தேவை இல்லாத நேரங்களில் மூடி வைக்க வேண்டும்.

சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை மூடி வைப்பது மிகவும் முக்கியம். சமையலறையில் தான் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி அதிகளவில் நடமாடும்.

வீட்டு சுவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் இருக்கும் பொருட்களை அவ்வப்போது நகர்த்தி சுத்தம் செய்து வைப்பது மிகவும் முக்கியம்.

வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க எளிய தீர்வு இதோ:-

தேவையான பொருட்கள்:-

*கரு மிளகு – 1 தேக்கரண்டி

*பூண்டு பல் – 10

*இலவங்கம் – 10

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

அடுத்து 10 இலவங்கம் மற்றும் 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் 10 பல் பூண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

பின்னர் இந்த பூண்டு சாறை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும். ஏற்கனவே ஊற வைத்துள்ள மிளகு, இலவங்கம் தண்ணீரை அதில் ஊற்றி கலந்து கொள்ளவும். முன்னதாக மிளகு மற்றும் இலவங்கத்தை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

இந்த தண்ணீரை வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் கையில் எடுத்து தெளித்து விடலாம். அல்லது ஒரு ஆயில் ஸ்ப்ரேயரில் ஊற்றி தெளித்து விடலாம். இந்த வாசனை கரப்பான் பூச்சி மற்றும் பல்லிக்கு அறவே பிடிக்காது என்பதினால் அவை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடும்.