கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்!

0
249
#image_title

கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்!

*துளசி

ஒரு கைப்படி அளவு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் வரும் கெட்டை வாடை குணமாகும்.

*எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*தேன் + எலுமிச்சை சாறு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன்.. ஆகிய இரண்டையும் கலந்து பற்களில் தேய்த்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

*எலுமிச்சை சாறு + தூள் உப்பு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து பற்களில் தேய்த்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

*சோம்பு

ஒரு ஸ்பூன் அளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

*மிளகு + உப்பு + சோம்பு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

*பெருஞ்சீரகப் பொடி + இந்துப்பு

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பற்களை துலக்கி வந்தால் வாயில் வரும் கெட்டை வாடை நீங்கும்.

*துளசி பொடி + எலுமிச்சை பொடி

துளசி மற்றும் எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கலந்து வாயை சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.