நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

0
187

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

சாதாரணமாக கொய்யா பழத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொய்யா பழத்தில் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

கொய்யா பழத்தை விட கொய்யாவின் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். வலி மற்றும் வீக்கங்களை குறைக்க கூடிய சக்தி இந்த கொய்யா இலைக்கு உள்ளது.

குறிப்பாக சளி இருமல் காய்ச்சல் பல் வலி ஈறுகளில் ரத்தம் கசிதல் வாய்ஸ் துர்நாற்றம் என பல பிரச்சினைகளை இந்த கொய்யா இலை சரி செய்கிறது. உடம்பில் இருக்கக்கூடிய ஏராளமான நோய்களை குணப்படுத்தும் சக்தி இந்த கொய்யா இலைக்கு உள்ளது.

இதற்கு கொய்யா இலைகளை அப்படியே மென்றோ அல்லது கஷாயம் செய்தோ குடித்து வரலாம். கசாயம் செய்வதற்கு இந்த கொய்யா இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.

பிறகு இந்த இலையில் இருக்கக்கூடிய நார்களை நீக்கிவிட்டு இலையை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இந்த தண்ணீரில் நாம் கழுவி வைத்திருக்கக்கூடிய கொய்யா இலையை சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் இரண்டு ஏலக்காய் 3 மிளகு 2 லவங்கம் மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி நன்றாக உரலில் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

மேலும் இதனுடன் சுவைக்காக சிறிதளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த வெல்லத்தை சேர்க்கவே கூடாது. வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட சளி இருமல் கபத்தையும் குறைக்கக்கூடிய சக்தி இந்த கசாயத்திற்கு உள்ளது.

நாம் தயார் செய்த இந்த கஷாயத்தை வடிகட்டி விட்டு வெதுவெதுப்பான சூட்டில் மெதுவாக பொறுமையாக குடிக்க வேண்டும். இந்த கசாயத்தை இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்.

மேலும் வறட்டு இருமல் நெஞ்சு சளி கபம் போன்றவை அதிகமாக இருப்பவர்கள் இந்த கசாயத்தை நாள் தவறாமல் ஒரு வாரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சளி இருமல் போன்ற தொந்தரவே இருக்காது.

Previous articleஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!
Next articleஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!