ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

0
51

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

பொதுவாக மாம்பழம் என்றாலே பிடிக்காத நபர்களே கிடையாது. இதை ஜூஸாகவும் பழமாகவும் உணவாக சமைத்தும் என பல்வேறு விதமான இதை அனைவரும் உண்டு வருகிறோம். இதனால் உடல் நல பலன்கள் உண்டு.

அதாவது மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும்.

இரகத்தைப் பொறுத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும். இப்பேர்ப்பட்ட இந்த மாம்பழத்தை வெயிலில் உண்பதால் கட்டி வரும் என்று சிலர் கூறுகின்றனர். முக்கனிகளில் முதல் பழம் இந்த மாம்பழம் தான்.

இதன் மகசூல் வெயில் காலங்களிலேயே அதிகமாக காணப்படும். இந்த மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் அழைத்து வருகின்றனர். இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் மிகவும் நல்லது. இந்த மாம்பழத்தில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க முடியும்.

இதில் நார் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையையும் உடனடியாக தீர்த்து வைக்கிறது. முக்கியமாக இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிட்டு வரலாம் ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும். இந்த அளவை மருத்துவர்களிடம் கேட்டு சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடலாம் என்பது பொருள் அல்ல.

இதில் நார்ச்சத்து இருப்பதால் இதை அதிகமாக உண்ணக்கூடாது. ஏனென்றால் இந்த நார்ச்சத்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் உடல் எடை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

author avatar
CineDesk