கல்லீரலில் ஆரோக்கியம் மேம்பட இந்த ஒரு பானத்தை மட்டும் அருந்துங்கள் போதும்..!!

Photo of author

By Divya

கல்லீரலில் ஆரோக்கியம் மேம்பட இந்த ஒரு பானத்தை மட்டும் அருந்துங்கள் போதும்..!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.

ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பாதிப்பு ஆண்களுக்கு தான் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர்.

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*எலுமிச்சை சாறு

*பட்டை துண்டு

*பூண்டு

*மஞ்சள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 துண்டு இடித்த சுக்கு, 1 துண்டு பட்டை, 2 பல் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கல்லீரலில் அடைபட்டு கிடந்த கழிவுகள் முழுவதும் நீங்கி அவை சுத்தமாகவும், ஆரோக்யமாகவும் இருக்கும்.

அதேபோல் பெரு நெல்லிக்காய் மற்றும் ஃப்ரஷ் கற்றாழை ஜெல்லை ஜூஸ் செய்து பருகினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறி அவை ஆரோக்கியமாக இருக்கும்.