மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

Photo of author

By Divya

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் சாதாரண ஒன்றாக இருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தாமல் விட்டால் நாளைடைவில் மார்பு பகுதியில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும்.

இதை குணமாக்கி கொள்ள மருத்துவம் குணம் நிறைந்த சித்தரத்தையை பயன்படுத்தவும். இவை சளிக்கு சிறந்த நிவாரணம் ஆகும்.

சித்தரத்தையை பொடியாக்கி நீரில் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்…

*சித்தரத்தை
*தண்ணீர்
*தேன்

செய்முறை

ஒரு துண்டு சித்தரத்தையை அரைத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை பொடி கிடைக்கும்.. அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

சித்திரத்தையை எவ்வாறு பயன்படுத்துவது…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் ஒரு ஸ்பூன் சித்தரத்தை பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

சித்தரத்தை பொடி தண்ணீர் கொதித்து சுண்டி வந்த பின்னர் அதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

இந்த சித்தரத்தை நீர் சளியை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.