ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

Photo of author

By Divya

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

பாத வெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுவது,துணி துவைப்பது உள்ளிட்டவற்றால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனால் பாத வெடிப்புகள் ஏற்பட்டு அவை எரிச்சலை உண்டாக்குகிறது.சிலருக்கு குளிர் காலங்களில் அதிகளவு பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படும்.

இந்த பாத வெடிப்பு நமக்கு வலியை தருவதோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது.எனவே பாதத்தை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 2 தேக்கரண்டி

*வேப்ப இலை – 2 கொத்து

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*கல் உப்பு – தேவையான அளவு

*எலுமிச்சை பழச்சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

1)முந்தின நாள் இரவு ஒரு பவுலில் 2 தேக்கரண்டி அளவு பச்சரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

2)அடுத்த நாள் காலையில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊற வைத்துள்ள பச்சரிசி போடவும்.அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 கொத்து வேப்பிலை மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு நன்கு அரைக்கவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

3)அடுப்பு பற்றவைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள அரசி கலவையை சேர்க்கவும்.மிதமான தீயில் கைவிடாமல் கலக்கவும்.பின்னர் அவை சிவப்பு நிறத்திற்கு மாறி பேஸ்ட் பதத்திற்கு வரும்.அந்த நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஆறவிட்டு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும்.

4)இரவு உறக்கத்திற்கு முன் சுடு நீரில் தேவையான அளவு கல் உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதில் பாதங்களை மூழ்கும்படி 10 நிமிடம் வைக்கவும்.

5)பின்னர் பாதத்தை ஒரு துண்டு வைத்து சுத்தமாக துடைக்கவும்.பின்னர் பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை நன்றாக தடவவும்.இந்த பேஸ்ட் காய்ந்த பின்னர் தூங்க செல்லவும்.இப்படி தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு விரைவில் மறைந்து விடும்.