ஒரே ஒரு “சுண்டைக்காய்” உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூலத்தை வேரோடு அறுத்து எரியும்!

Photo of author

By Divya

ஒரே ஒரு “சுண்டைக்காய்” உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூலத்தை வேரோடு அறுத்து எரியும்!

மூல நோய் ஏற்பட்டவருக்கு மலம் கழிக்கும் பொழுது ஆசனவாய் பகுதியில் இரத்தப்போக்கு ஏற்படும். அதுமட்டும் இன்றி ஆசனவாய் பகுதியில் வலி, புண், வீக்கம், எரிச்சல் உண்டாகும். இதை குணமாக்க சுண்டைக்காய் சிறந்த தீர்வு ஆகும்.

சுண்டைக்காயில் புரதச்சத்து, கால்சியம், இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. இவை மூல நோயை குணப்படுத்துவதோடு நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

சுண்டைக்காய் – 1/4 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)
பூண்டு பல் – 3(நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சிறிதளவு
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

1/4 கப் அளவு சுண்டைக்காயை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

இவை இரண்டும் வதங்கி வந்த பின்னர் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்து இடித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு கிளறவும்.

பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். சுண்டைக்காய் சூப் நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் மற்றும் வாசனைக்காக சிறிது கொத்தமலை தழை போட்டு கலந்து குடிக்கவும்.