7 நாளில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்!

Photo of author

By Divya

7 நாளில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பலரும் உடல் பருமன் பாதிப்பை சந்தித்து வருகிறோம். உடலில் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிகப்டியான கெட்ட கொழுப்புகள் தேங்கி தொப்பையாக மாறிவிடுகிறது. இதை ஓரிரு நாட்களில் குறைப்பது என்பது முடியாத காரியம். தொப்பையை குறைக்க தினமும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டுடன் 1 கிளாஸ் வெந்தயம் + சோம்பு நீர் அல்லது சீரகம் + ஓமம் நீர் அருந்துவது நல்லது.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

*சோம்பு(பெருஞ்சீரகம்)

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகத் தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் தொப்பை கரைந்து விடும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*ஓமம்

*தேன்

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 ஸ்பூன் ஓமம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் அரைத்த சீரகம் +ஓமப் பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து பருகவும். இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் தொப்பை கரைந்து விடும்.