கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!!

0
183
#image_title

கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!!

பொதுவாக பெண்கள் தங்களின் உதடு பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். இதனால் கூடுதல் அழகு முகத்திற்கு கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. இதற்காக லிப் பாம், லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அவை சில மணி நேரம் மட்டுமே உதடுகளை சிவப்பு அல்லது பிங்க் நிறத்திற்கு காட்டும். கருமை உதடு நிரந்தரமாக பிங்க் நிறத்திற்கு மாற வேண்டும் என்றால் அதற்கு இயற்கை முறையை தான் பின்பற்ற வேண்டும்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*உருளைக்கிழங்கு

செய்முறை…

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு சாறு பிழிந்து கொள்ளவும்.

இந்த உருளைக்கிழங்கு சாறை உதட்டின் மேல் தடவினால் சில நாட்களில் கருமை உதடு பிங்க் மாறிவிடும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*சர்க்கரை

*தேன்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை உதட்டின் மேல் தடவினால் கருப்பான உதடு பிங்க் நிறத்திற்கு மாறும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*வெள்ளரி

செய்முறை…

ஒரு துண்டு வெள்ளரியை அரைத்து சாறு எடுத்து உதடுகளில் தடவி வந்தால் கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாறி விடும்.

Previous articleகேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி – செய்வது எப்படி?
Next articleஇந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!