பாத்ரூமில் அசிங்கமாக படிந்து கிடக்கும் மஞ்சள் கறை நீங்க இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!
பாத்ரூமில் மஞ்சள் கறை,உப்பு கறை வருவது சாதாரண ஒன்று தான்.வாரம் ஒருமுறை பாத்ரூமை சுத்தம் செய்து வந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
பாத்ரூமில் படிந்துள்ள உப்பு மஞ்சள் கறை நீங்க எளிய வழிகள்:
1)வெள்ளை வினிகர்
2)சோப்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதில் ஒரு வாஷிங் சோப் சேர்த்து கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் 3 தேக்கரண்டி வெள்ளை வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு ஒரு பிரஷ் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால் டைல்ஸில் ஒட்டி கிடந்த மஞ்சள் உப்பு கறை நீங்கி விடும்.
1)தூள் உப்பு
2)தண்ணீர்
3)ஷாம்பு
4)எலுமிச்சை சாறு
5)ஸ்ப்ரே பாட்டில்
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தூள் உப்பு,ஒரு ஸ்பூன் ஷாம்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.அதன் பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
பாத்ரூமில் படிந்துள்ள கறைகளில் மீது ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் கறைகள் இருந்த இடம் தெரியாமல் வெளியேறிவிடும்.