சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

0
191
#image_title

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

தற்பொழுது உடல் பருமனால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் தான் உடல் பருமனாகிறது.

கோடை காலம் தொடங்கி வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் வாக்கிங்,ஜாக்கிங் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.இதனால் உடல் எடை எளிதில் கூடி விடும்.எனவே வெயில் காலத்தில் உடல் எடையை வீட்டில் இருந்தவாறு குறைக்க சில இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

1)இளநீர்

தினமும் காலையில் ஒரு இளநீர் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்.உடல் புத்துணர்வு பெறும்.சோம்பல் இல்லாமல் வேலை பார்க்க முடியும்.

2)வெள்ளரிக்காய்

ஒரு கிளாஸ் வெள்ளரி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடையை தானாக கட்டுப்படும்.

3)எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் இனிப்பு சேர்க்காத எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் உடலில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்புகளை எளிதில் அகற்றி விட முடியும்.

4)நீர்சத்து நிறைந்த காய்கறிகள்

சுரைக்காய்,புடலை போன்ற நீர்சத்து நிறைந்த காய்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கூடாமல் இருக்கும்.