உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!
இன்றைய வாழ்க்கை சூழல் முற்றிலும் மாற்றம் கண்டு விட்டது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் தொடங்கி விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த உடல் எடை பிரச்சனையை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
*சுக்கு – 1 துண்டு
*எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
*தூயத் தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் 1 துண்டு சுக்கு எடுத்து உரலில் போட்டு பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அதேபோல் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் இடித்து பொடி செய்து வைத்துள்ள சுக்கு மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அடுத்து 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும்.
இந்த ரெமிடியை இரவு உணவு உட்கொண்ட பிறகு தான் பருக வேண்டும். இப்படி தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடலில் படிந்து உள்ள கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும். இதனால் உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.